பத்து நாடுகளில் வாடிக்கையாளர்கள், ஏழு சர்வதேச மொழிகளில் 250 காணொலி படைப்புகள் என்று பரபரப்பாகச் செயல்பட்டும், ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி இருக்கிறார் ‘டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸின் நிறுவனர், ஜபீர். பல்வேறுத் துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு, எக்ஸ்ப்ளெயினர் வீடியோக்கள் அதாவது விளக்கப் படங்களை தயாரித்துக் கொடுக்கும், ஸ்டார்ட்-அப் நிறுவனமே, “டூன் எக்ஸ்ப்ளெயினர்ஸ்” (Toon Explainers).

“எனது பூர்வீகம் கோவை. ஸ்கூல் காலத்திலிருந்தே படம் வரைவது பெயிண்ட் செய்வது எல்லாம் மிக விருப்பம். வடிவமைப்பதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் தான் கல்லூரியில் படிப்புத் தேர்வு செய்த போது ப்ரோகாமிங் அல்லாமல் டிசைனிங் தேர்வு செய்தேன். முதுநிலை பட்டம் பெற்ற பிறகு வேலையில் இரண்டு வருடம் இண்டர்னாகத் இருந்தேன். அதன் பிறகு தான் வடிவமைப்பை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொண்டேன். அனிமேஷன் செய்யவும் அங்கே கற்றுக் கொண்டேன்.

அதற்குப் பிறகு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே எனக்கு மொபைல் விளையாட்டுக்கள், மொபைல் செயலிகள் வடிவமைக்கும் பொறுப்பு.See more